search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறை தீர்க்கும் நாள் கூட்டம்
    X

    குறை தீர்க்கும் நாள் கூட்டம்

    • சிவகங்கையில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து 414 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத் திறனாளி களுக்கான உபகர ணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 414 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்து றையின் சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79 ஆயிரத்து 740 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பின்முனை வட்டி மானியத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.13 லட்சம் மதிப்பீட்டிலான மானியத் தொகைக்கான ஆணையையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு கடனுதவிக்கான ஆணைக ளையும் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 79 ஆயிரத்து 740 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×