search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வகுப்பறை கட்டிடம், கலையரம் திறப்பு
    X

    கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள புதிய கணினி அறையை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், பஞ்சாயத்து தலைவர் நாச்சியப்பன் உள்ளனர்.

    வகுப்பறை கட்டிடம், கலையரம் திறப்பு

    • வகுப்பறை கட்டிடம், கலையரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்டதாகும்.

    சிவகங்கை

    பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தனியார் பங்களிப்புடன் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் கலையரங்கம் திறப்பு விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வகுப்பறை கட்டிடங்கள், நுழைவு வாயில், கலையரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்டதாகும். ஓலைக்கொட்டகையில் தொடங்கப்பட்டு அதன் பின்னர் ஓடுகள் அமைத்தும், தற்போது கான்கிரீட் அமைத்து, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளியாக 500 மாணவர்கள் படிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இந்த பள்ளியில் கட்டிடத் திறப்பு விழா, விளையாட்டு விழா மற்றும் 115-வது ஆண்டு விழா முப்பெரும் விழாவாக கொண்டா டப்படுகிறது. இந்த பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது உயர்ந்த நிலையில் இருந்து வருவது குறித்து, இங்கு எடுத்துரைத்தனர்.

    எதிர்கால சந்ததியினர்களாகிய மாணவர்களுக்கு தரமான கல்வியை பெறுவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்து வதற்கென மேலும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து அரசுடன் இணைந்து செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நூற்றாண்டு விழா காணும் கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நூற்றாண்டு நுழைவுவாயில் அமைப்பதற்கும், சூரியமின் சக்தி, புதிய கணினிகள், பெருந்தலைவர் காமராஜர் கலையரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தங்களது பங்களிப்பை ஏற்படுத்தி, இப்பள்ளியின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு, அரசுடன் இணைந்து பணியாற்றியது பாராட்டுக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து, பள்ளி நூற்றாண்டு விழாவில் 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு கொடை யாளர் பங்களிப்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகையுடன், தனது சொந்த நிதியில் இருந்தும் மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    மாநில அளவில் சிலம்ப போட்டியில் 2-வது இடத்தை பெற்ற மாணவனுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை யும், திருக்குறள் சொல்லி சிறப்பித்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொ கையாகவும் வழங்கினார்.

    இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன். கல்லல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சொர்ணம் அசோகன், கல்லல் ஊராட்சி மன்றத்தலைவர் நாச்சியப்பன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×