என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம்
- தமிழக பட்ஜெட்டில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
- தி.மு.க. ஆட்சியில் ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த காவரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசா யிகள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் எம்.அர்ச்சுனன் கூறியதாவது:-
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு 14.2.21-ல் அ.தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் விராலிமலை அருகில் அடிக்கல் நாட்டப்பட்டது.
காவிரி ஆற்றின் கரூர் மாயனூர் கதவணையில் இருந்து புதுக்கோட்டை, தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் முதல் நிலையாகவும், தெற்கு வெள்ளாறில் இருந்து வைகை ஆறு வரை 108 கிலோமீட்டர் 2-ம் நிலை யாகவும், வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டி புதுப்பட்டி குண்டாறு வரை 34 கிலோமீட்டர் 3-ம் நிலையாகவும் என மொத்தம் 260 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கால்வாய் திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்திற்கு 2021-22 அ.தி.மு.க. ஆட்சியில் பட்ஜெட்டில் ரூ.760 கோடி ஒதுக்கப்பட்டது.
2022-23-ல் தி.மு.க. ஆட்சியில் ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
மாயனூர் ஜீரோ பாய்ண்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை 4 பேக்கேஜ்கள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நடப்பு 2023-24 பொது பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த 7 மாவட்ட விவசாயிகளுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இருக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பட்ஜெட் விவாதத்தின் போது காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு இந்த ஆண்டு கூடுதல்நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்