search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாச்சியம்மன்-விநாயகர்-காமாட்சி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
    X

    நாச்சியம்மன்-விநாயகர்-காமாட்சி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்

    • நாச்சியம்மன்-விநாயகர்-காமாட்சி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அரிபுரம் கிராமத்தில் நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அரிபுரம், காலாங்கரைப்பட்டி, வைரவபுரம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் காரையூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரி சையாக நடந்தது. குன்றக் குடி பொன்னம்பல அடி களார் தலைமையில் உமாபதி சிவாச்சாரியார்கள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி னர்.

    விழா குழு பணிகளில் குமாரசாமி, தர்மசீலன், கண்ணன், துர்வாசன், கனகரத்தினம், சண்முகம், உமாபாலன், சடையாண்டி, சாந்ததேவன், செல்வ ராஜ்,யசோதரன், ஜெக நாதன், சிவபெருமாள் மாரி யம்மாள் மற்றும் வளர்பிறை விளையாட்டு குழுவினர் ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் கண்டவராயன் பட்டி காவல் ஆய்வாளர் அய்ய னார் தலைமையில் காவ லர்கள் ஈடுபட்டனர்.

    வேலங்குடியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகள், லட்சுமி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டது. நேற்று கணேஷ், குருசாமி குருக்கள் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வீரணமு டையார் மகரிஷி கோத்திர பங்காளி வகையறாக்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×