search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
    X

    கல்லல் யூனியன் கிளாமடம் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கலையரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், சிராவயல் பஞ்சாயத்து தலைவர் சரோஜாதேவி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

    • கல்லல் யூனியனில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
    • 100 கே.வி.ஏ மின்மாற்றியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.31.98 லட்சம் மதிப்பீட்டில் 3 வளர்ச்சித் திட்ட பணிகள் முடிவுற்றன. இதன் தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று திட்டப்பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணி களை மேற்கொள்வதற்காக ஆண்டிற்கு சுமார் ரூ.3கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ப டுகிறது.

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான சிராவயல் ஊராட்சி, கிளாமடம் கிராமத்தில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிதாக சமுதாய கூடத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டுவதற்கும் மற்றும் அதிகரம் பள்ளியை நிலை உயர்த்துவதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    இது தவிர தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கம்பனூர் ஊராட்சி கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 90 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க புதிதாக ரூ.9.89 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ மின்மாற்றியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பலவான்குடி ஊராட்சி, ஆலத்துப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கும் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து எடுத்துரைத்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பணிகள் உடன டியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் அசோகன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் லதா தேவி, கண்டரமாணிக்கம் உதவி பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரசுவதி, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் நாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லட்சு மணன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் முத்தழகு, சையது அபுதாகிர், ஊராட்சி மன்றத்தலைவர் சரோ ஜாதேவி குமார் (சிராவயல்), அமுதா (கம்பனூர்), சத்திய கலா(பலவான்குடி), வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் செழியன், அழகு மீனாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×