search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய அளவில் பார்வையற்றவர்களுக்கான சதுரங்க போட்டி
    X

    பார்வையற்றவர்களுக்கான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி பரிசு வழங்கினார். அருகில் தாளாளர் சேதுகுமணன் உள்ளார்.

    தேசிய அளவில் பார்வையற்றவர்களுக்கான சதுரங்க போட்டி

    • தேசிய அளவில் பார்வையற்றவர்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது.
    • சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 162 பேர் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள விசாலயன் கோட்டை சேது பாஸ்கரா வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய அளவில் பார்வையற்ற வர்களுக்கான முதலாவது ''சேது பாஸ்கரா பிடே தரவரிசை சதுரங்க போட்டி'' நடந்தது.

    போட்டியை சேது பாஸ்கரா கல்வி குழுமங்களின் தலைவர் சேது குமணன் தொடங்கி வைத்தார். இதில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களை சேர்ந்த சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 162 பேர் பங்கேற்றனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் சேது பாஸ்கரா கல்வி குழுமம் சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூ தன்ரெட்டி வழங்கினார். அவர் பேசுகையில், உலக தரமான கல்வியுடன் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்க ளை திறம்பட செய்து வருகிறது, சேது பாஸ்கரா கல்வி குழுமம்.

    இங்கு படிக்கும் மாணவர்கள் மிகப்பெரிய நிலையில் உயர்ந்து சிறப்பிடம் பெறுவார்கள். கண்பார்வையற்ற வர்களுக்கான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள். குறைபாடுள்ளவர்கள் முன்னேறுவதை அனை வரும் பாராட்ட வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் திருப்பதி, கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குநர் கோபால், ஆலோசகர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×