என் மலர்
- ராஜபாளையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட முயற்சி நடப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதால், மூடப்பட்ட ரெயில்வே கேட்டுக்கு மாற்றாக டி.பி.மில்ஸ் சாலையையும், எதிர்ப்புற சாலையையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன் மூலம் இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறாமல் சுலபமாக ரெயில் பாதையை கடக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணிகள் நிறைவேறி இடையூறில்லாத போக்குவரத்து உருவாகும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
அந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்க வேண்டி உள்ளது. அந்த திட்டவரைவை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே ரெயில்வே துறை தனது பொறுப்பில் சுரங்கப் பாதை நிறுவுவதற்குரிய காங்கிரீட் பாலங்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை பணிகளை முற்றிலும் கைவிடும் முயற்சிகள் மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாத கையறு நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் நகரின் கிழக்கு பகுதியில்தான் அமைந்துள்ளன. மாணவர்கள், பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேருதவியாக அமையும் சுரங்கப்பாதை திட்டம் கைவிடப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு திட்டப்பணிகள் தாமதம் காரணமாக துவண்டு போய் கிடக்கும் நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.
இந்தநிலையில் உள்ளாட்சி மக்கள் மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், தொழில் நிறுவன நிர்வாகங்கள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இந்த திட்டம் கை விடப்படுவதை தடுத்துநிறுத்தி, சுரங்கப் பாதை திட்டத்தை எந்த தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும் என ராஜபாளையம் ரெயில் பயனாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 96.22 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 3-வது இடத்தை பிடித்தது.
- 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 307 மாணவர்கள், 12 ஆயிரத்து 612 மாணவிகள் உட்பட 24 ஆயிரத்து 919 பேர் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 662 மாணவர்க ளும், 12 ஆயிரத்து 315 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 94.76 சதவீதம் பேரும் மாணவிகளில் 97.65 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர். சராசரி அடிப்படையில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவர்கள் 97.7 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.79 சதவீதமும், அரசு பள்ளி களில் 93.13 சதவீதமும், நகராட்சி பள்ளிகளில் 96.02 சதவீதமும், பகுதியாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் 97.45 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 99.27 சதவீத மும், சுயநிதி பள்ளிகளில் (மாநில பாடத்திட்டம்) 98.47 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
- இருதரப்பினர் மோதல்; பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி தாவீது நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா கண்ணன். பாதிரியாரான இவர் செம்பட்டி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள விஜயலட்சுமி என்பவர் வீட்டில் ஜெபகூட்டத்தை நடத்தினார். அப்போது அங்கு வந்த அருப்புக்கோட்டை ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் சுரேஷ்குமார், பூலோகராஜா மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக சுரேஷ்குமார் மற்றும் ஜோஸ்வா கண்ணன் ஆகிய இரு தரப்பினர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள பெரியபாளையத்தை சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண் அடிக்கடி பண உதவி செய்து வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்ததால் முத்துபாண்டி உடனான பழக்கத்தை அந்த பெண் தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துபாண்டி சம்பவத்தன்று அந்த பெண்ணிடம் முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
- கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் புகார் கொடுத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கீழராஜகுலராமன் வருவாய் ஆய்வாளர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது இறந்து கிடந்தவர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர்-காளியம்மன் கோவில்களில் துணிகர கொள்ளை நடந்துள்ளது.
- கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூசாரி வன்னியராஜ் வழக்கம் போல் கோவிலை பூட்டி சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்குவந்த மர்மநபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பூசாரி வன்னியராஜ் கதவு உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பணம் கொள்ளை போயி ருந்தது.
இதுகுறித்து குடியிரு ப்போர் நலச்சங்க செயலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காளியம்மன் கோவில்
ஆலங்குளம் தேவர் நகர் முக்கு ரோடு பகுதியில் கரையடி கருப்பசாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அங்கிருந்த அம்மனின் 6கிராம் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பினர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கொள்ளை கும்பல் சிறிய கோவில்களை குறிவைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை.
போர்வெல் அமைத்து தண்ணீர் தொட்டி மூலம் வழங்கப்பட்டு வந்த நேரம் மோட்டார் பழுதானதால் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்கும், பிற தேவை களுக்கும் தண்ணீரின்றி சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெரு மக்களுக்கு குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுன்சிலர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.
இதில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் ஆகியோர் பேசினர். போராட்டம் முடிந்த பின் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
- வாலிபரிடம் ரூ.15லட்சம் மோசடி செய்த அருப்புக்கோட்டை நகராட்சி பெண் ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- ரகுராம் அருப்புக்கோட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குழந்தை வேல்புரம் முதல் தெரு வெள்ளைக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ரகுராம். இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ரகுராமின் மாமியார் உத்தரகுமாரியும், அருப்புக்கோட்டை நகராட்சியில் ஊழியராக பணிபுரியும் லட்சுமிதேவி என்பவரும் ஏற்கனவே தனியார் நூற்பாலையில் வேலை பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் ரகுராம் அரசு வேலைக்கு முயற்சி செய்வதை தெரிந்து கொண்ட லட்சுமிதேவி உத்திரகுமாரியிடம், உங்கள் மருமகனுக்கு எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சென்னை தலைமை செய லகத்தில் வேலை வாங்கித் தருகிறேன். அதற்கு பணம் செலவாகும் என்று கூறி உள்ளார். அதை உத்திர குமாரி நம்பியதை தொடர்ந்து அவருக்கு நெல்லையை சேர்ந்த வெள்ளத்துரையை லட்சுமி தேவி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
வெள்ளைத்துரை நாகர்கோவிலுக்கு ரகு ராமை அழைத்துச் சென்று டேனியல் என்பவரிடம் இவர் நமது புரோக்கர் லட்சுமிதேவிக்கு மிகவும் வேண்டியவர் என்று தெரிவித்து அவரிடம் பணம் கொடுத்தால் வேலை வாங்கி கொடுப்பார் என கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து டேனியல் ரகுராமுக்கும், அவரது தம்பிக்கும் வேலை வாங்கி கொடுக்கிறேன் என தெரிவித்து ரூ.15 லட்சம் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து டேனியல் வங்கி கணக்கில் ரகுராம் ரூ.7 லட்சம் செலுத்தி உள்ளார். மேலும் நகையை அடகு வைத்து ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் சொன்னப் படி வேலை வாங்கி கொடுக்க வில்லை. இதைத்தொடர்ந்து ரகுராம், டேனியல் அலுவலகத்துக்கு சென்று தான் அனுப்பிய பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். அப்போது டேனியல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
டேனியல் ரகுராமிடம் 2 காசோலைகளை கொடுத்துள்ளார். அதனை வாங்கியில் போட்டபோது அதில் பணம் இல்லை என்று திரும்பிவந்துவிட்டது. இதுதொடர்பாக ரகுராம் அருப்புக்கோட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தர விட்டார். அதன்பேரில் டேனியல், வெள்ளைத்துரை, லட்சுமி தேவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (38). பெயிண்டரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், மகளும் உள்ளனர். 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து முத்துலட்சுமி தனது மகளுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது சகோதரி வீட்டில் இருந்த முத்துலட்சுமியை தாக்கி கனகராஜ் பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் அவரது மகள் தீக்காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமி அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த பின் மாஜிஸ்திரேட் பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அதில் கனகராஜுற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
- ரெயில் மோதி வாலிபர் இறந்தார்.
- கிராம நிர்வாக அதிகாரி கேசவன் போலீசில் புகார் செய்தார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கேத்த நாயக்கன்பட்டியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த விருதுநகர்- காரைக்குடி பயணிகள் ரெயிலை அந்த வாலிபர் கவனிக்கவில்லை.
இதன் காரணமாக ரெயில் மோதியதில் அந்த வாலிபர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சென்னிலைக்குடி கிராம நிர்வாக அதிகாரி கேசவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? விபத்தா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்குடி அருகே தலையில் கல்லைபோட்டு காய்கறி வியாபாரி கொலை செய்யப்பட்டார்.
- போலீசார் முருகேசனை கைது செய்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 45). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், முருகே சன் (22) என்ற மகனும் உள்ளனர். சூரக்குடி பகுதி யில் அடைக்கலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் தான் பார்த்து வந்த வியாபாரத்தை விட்டு விட்டு சில ஆண்டு களுக்கு முன்பு அடைக்கலம் வேலைக்காக திருப்பூருக்கு சென்றார். அங்கு ஒரு கம்பெனியில் வேலை பார்த்தபோது அடைக்கலத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடைக்கலம் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெரியகோட்டைக்கு அடைக்கலம் அந்த பெண்ணை அழைத்து வந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த செயல் மகன் முருகேசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தந்தை-மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இரவும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த முருகேசன் தந்தை அடைக்கலம் தலையில் கல்லை போட்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து தகவலறிந்த சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் முருகேசனை கைது செய்த னர்.
வேறொரு பெண்ணை திருமணம் செய்து ெகாண்டு குடும்பம் நடத்தியதால் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இரண்டாம் ஆண்டு தொடக்க விழாயையொட்டி நேஷனல் ஷாப்பிங் மால் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
நெற்குப்பை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அஞ்சப்பர் டவரில் நேஷனல் ஷாப்பிங் மாலின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வாஷிங் மெஷின், பிட்ஜ், 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி., டேபிள் டாப் கிரைண்டர், மிக்ஸி, 100 வாடிக்கையாளர்களுக்கு தோசை தவா உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இவ்விழாவில் நேஷனல் ஷாப்பிங் மால் உரிமையாளர் எம்.முகமது நசுருதீன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
வின்னர்ஸ் மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முதல் பரிசு வாஷிங் மெஷின் பெறுபவர் புகழேந்தி ராங்கியம், இரண்டாவது பரிசு பிரிட்ஜ் பெறுபவர் மகாலட்சுமி வளையப்பட்டி, மூன்றாவது பரிசு 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. பெறுபவர் கண்ணன் பொன்னமராவதி, நான்காவது பரிசு டேபிள் டாப் கிரைண்டர் பெறுபவர் தஸ்வின் பொன்னமராவதி, ஐந்தாவது பரிசு மிக்ஸி பெறுபவர் கதிர்வேல் நெற்குப்பை மற்றும் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒன்று வீதம் 100 தோசை தவா வழங்கப்பட்டது.
- தி.மு.க. முன்னாள் எம்.பி. தா.கிருஷ்ணனின் 20-ம் ஆண்டு நினைவு நாள் நாளை நடக்கிறது.
- தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கொம்புக்காரனேந்தலை சேர்ந்தவர் மறைந்த தா.கிருஷ் ணன். முன்னாள் எம்.பி.யான இவர் ஒருங்கிணைந்த ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாள ராகவும், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி னார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி மரணமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தலில் தா.கிருஷ்ணனின் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் மாவட்ட தி.மு.க. சார்பில் அவரது நினைவை போற்றும் வகையில் கொம்புக்கார னேந்தலில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நாளை (20-ந்தேதி) சனிக்கிழமை காலை 10 மணி அளவில் கொம்புக்கார னேந்தலில் உள்ள தா.கிருஷ்ணன் நினைவிடத்தில் சிவகங்கை மாவட்ட செயலா ளரும், அமைச்சருமான கே ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்து கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை தா.கிருஷ்ணன் குடும்பத்தினர், சிவகங்கை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். நினைவுநாள் நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள தி.மு.க. நிர்வாகி கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேருர் செயலா ளர்கள், சார்பு அணி நிர்வாகி கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்-அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.