search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மேல்நிலைப்பள்ளியை உடனடியாக அமைக்க  வேண்டும்-நகர்மன்ற தலைவர் கோரிக்கை
    X

    அரசு மேல்நிலைப்பள்ளியை உடனடியாக அமைக்க வேண்டும்-நகர்மன்ற தலைவர் கோரிக்கை

    • தேவகோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியை உடனடியாக அமைக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • கிராமங்களுக்கு சென்று படித்து வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டத்தின் பழமையான நகராட்சி தேவகோட்டை நகராட்சி ஆகும். நகரில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் வாக்கா ளர்களை கொண்ட நகராட்சியில் அரசு மேல் நிலைப்பள்ளி வேண்டும் என தமிழக அரசுக்கு நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை வைத்தார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    தேவகோட்டை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லா ததால் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் போதுமான இடவசதியும் எந்நேரத்திலும் மேல்நிலைப்பள்ளி இங்கு வரலாம் என எதிர் பார்ப்போடு 2 வகுப்பு வரை கட்டிடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.

    மேலும் கட்டிடங்கள் பற்றாக்குறை ஏற்படுமாயின் அதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் கட்டிடங்களை கட்டித் தர தயாராக உள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி வருவதற்கு ரூபாய் 2 லட்சம் நகராட்சி நிர்வாகம் பணம் கட்டியுள்ளது. ஆனால் இதுவரை மேல்நிலைப் பள்ளி வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள். முதல் நகர்மன்ற கூட்டத்தி லேயே நகருக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அதனை அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் இதுவரை வரவில்லை. இங்கு மாணவ-மாணவிகள் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பயில அருகில் உள்ள அனுமந்தகுடி, பெரியகாரை கிராமங்களுக்கு சென்று படித்து வருகின்றனர்.

    எல்லா பகுதிகளிலும் கிராமத்தில் இருந்து மேல்நிலை படிப்பிற்காக நகரங்களுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் தேவகோட்டை நகராட்சியில் மாணவ-மாணவிகள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்காக கிராமங் களுக்கு செல்கின்றனர்.

    தேவகோட்டை நகருக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வர அரசு உடனே உத்தரவு விட்டு செயல்படுத்தினால் நகர் மன்றமும் தேவ கோட்டை மக்களும் மாணவ செல்வங்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×