search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிக்கு அரிவாள் வெட்டு
    X

    மாற்றுத்திறனாளிக்கு அரிவாள் வெட்டு

    • தேவகோட்டையில் மாற்றுத்திறனாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • கடன் பிரச்சினையில் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே அடசிவயல் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகநாதன் (வயது36). இவர் கட்டுமான பணிக்கு தேவை யான பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு திருப்பத்தூர் சாலையில், ஸ்டேட் பேங்க் வீதி அருகே உள்ள செல்போன் கடை முன்பு நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு நல்லாங்குடியை சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (30), புதுக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் காளீஸ்வரன் (31) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாள், அரிவாளால் நாகநாதனை வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் தலை, கைகள் மற்றும் கால் பகுதியில் நாகநாதனுக்கு காயம் ஏற்பட்டது. ரத்த காயத்துடன் கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் டாக்சி டிரைவராகவும், காளீஸ்வரன் கடை மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வருவதாகவும் தெரியவந்தது.

    மேலும் காளீஸ்வரனிடம் தொழில் தேவைக்காக நாகநாதன் பல தவணை களில் ரூ.60 ஆயிரம் கடன் பெற்றதும், அதில் ரூ.40 ஆயிரம் திருப்பி கொடுத்த நிலையில் ரூ.20 ஆயிரம் திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளதும் தெரியவந்தது. கடன் பிரச்சினை காரணமாக நாகநாதனை அவர்கள் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் காளீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×