search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு
    X

    மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு

    • சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
    • இதனை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள், இணைப்பு சங்கங்களான 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 56 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் நியமிக்கப்பட வேண்டிய பணியாளர்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது தற்காலிகமாக காந்தி வீதியில் செயல்பட்டு வரும் மத்திய வங்கியின் தலை மையக வங்கி கிளையில் 7 ஆயிரத்து 926 வங்கி வாடிக்கையாளர் கணக்குகளுடன் ரூ.110 கோடிக்கு இட்டுவைப்புகள் நிலுவை உள்ளதையும், அரசு திட்ட கடன்களான சிறுவணிக கடன்கள், மாற்றுத்திறனாளி கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்களுடன் ரூ.84 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஏ.டி.எம்., தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளுடன் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஐ.எம்.பி.எஸ். மற்றும் யு.பி.ஐ. சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் காந்தி வீதியில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழுதடைந்த தலைமையக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, மத்திய வங்கி தலைமையக கிளைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜீனு, பொது மேலாளர் (பொறுப்பு) மாரிச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×