search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு சிவகங்கை கலெக்டர் வாழ்த்து
    X

    கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி கேடயம் வழங்கினார்.

    கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு சிவகங்கை கலெக்டர் வாழ்த்து

    • கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு சிவகங்கை கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
    • கல்வி நிறுவனங்கள் கல்வியோடு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும்.

    காரைக்குடி

    காரைக்குடி வித்யாகிரி பள்ளி குழுமம் சார்பில் செஸ் போட்டியில் இந்திய அளவில் 79, தமிழ்நாடு அளவில் 28-வது இடம் பெற்று கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த மாணவர் பிரனேசுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளிக் குழும தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் வரவேற்றார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, பள்ளிக்குழும தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகம்மது மீரா முன்னிலை வகித்தனர்.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், இளைய தலைமுறையினர்கள் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ் போல் திகழ்வதற்கு, தனித்திறமைகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளாக சிறுவயதில் இருந்து செஸ் விளையாட்டில் சிறப்பான பயிற்சிகள் பெற்று, 2020ல் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கு பெற்று, அதில் 2,400 புள்ளிகள் பெற்று, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்று பெருமை சேர்த்தார்.

    அதனைத்தொடர்ந்து, ஸ்வீடனில் நடந்த ரில்டன் கோப்பை செஸ் போட்டியில் பிரனேஷ் பங்கேற்று 2,500 புள்ளிகள் பெற்று, இந்தியாவின்

    79 -வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின்

    28-வது கிராண்ட் மாஸ்டர் எனும் சிறப்பையும் பெற்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகருக்கு பெருமை சேர்த்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

    இனிவரும்கா லங்களிலும் பிரனேஷ் 2,600 புள்ளிகளை விரைவில் பெற்று, சூப்பர் கிராண்ட் மாஸ்டராக திகழ வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவரது திறமையையும், ஆர்வத்தையும் வெளிக்கொ ணர்வதற்கு அடிப்படையாக இருந்த செஸ் கழக அமைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வித்யாகிரி பள்ளியை சேர்ந்த நிர்வாகிகள், குறிப்பாக உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் கடின பொருளாதார ரீதியாகவும் சமாளித்து, பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைத்து, உறுதுணையாக இருந்து விடாமுயற்சியுடன் உலக சாதனை படைக்க செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரமாக உள்ளனர்.

    உலக அளவில் மொத்தம் 2,000 கிராண்ட் மாஸ்டர்கள் தான் உள்ளனர்.ஆனால் பிரனேஷ் தனது 16 வயதில் வாழ்நாள் சாதனை படைத்துள்ளார்.இவரை போன்று பல்வேறு மாணவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து உருவாக வேண்டும்.கல்வி நிறுவனங்கள் கல்வியோடு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாணவர் பிரனேசுக்கு வித்யாகிரி கல்வி குழுமம் சார்பில் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. தொழிலதிபர் பழ.படிக்காசு, செஸ் கழக தலைவர் கருப்பையா, செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் ஹேம மாலினி சுவாமிநாதன் நன்றி கூறினார்.

    Next Story
    ×