search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
    X

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

    • சிவகங்கையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 7-ந் தேதி முதல் தொடங்குகிறது.
    • கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலானவிளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை தடகள விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை போஸ் நகரில் உள்ள பேட்மிட்டன் அகாடமியிலும் நடைபெறும்.

    8-ந் தேதி காலை கபடி, ஆக்கி, கூடைப்பந்து. கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகியவிளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். 9-ந் தேதி கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். 10-ந் தேதி காலை நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், தடகள விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், கபடி, ஆக்கி,கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் ஆண்களுக்கு மட்டும் சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியிலும், இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை பேட்மிட்டன் அகாடமியிலும் நடைபெற உள்ளன.

    11-ந் தேதி காலை நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும், கபடி, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து, கால்பந்து விளையாட்டுப்போட்டிகள் கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு மட்டும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    13-ந் தேதி காலை கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், கிரிக்கெட் போட்டிகள் பொதுப்பிரிவினர் ஆண்களுக்கு மட்டும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. 14-ந் தேதி காலை கிரிக்கெட் போட்டிகள் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு மட்டும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. 15-ந் தேதி காலை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் காரைக்குடிஅழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், இறகுப்பந்து போட்டிகள் பொதுப்பிரிவினர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிவகங்கை பேட்மிட்டன் அகாடமியிலும், பொதுப்பிரிவினர்ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி, கையுந்து பந்து, தடகளம் விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது.

    16-ந் தேதி காலை அரசு ஊழியர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, தடகளம்,கையுந்து பந்து, கபடி, செஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும்,17-ந் தேதி காலை மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, தடகளம்,எறிபந்து, கபடி, adopted volley ball ஆகிய போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது. 20-ந் தேதி காலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கிரிக்கெட் போட்டிகள் காரைக்குடிஅழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், 21-ந் தேதி காலை பள்ளி மாணவிகளுக்கு மட்டும் கிரிக்கெட் போட்டிகள் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

    டென்னிஸ் போட்டிகள் 23-ந் தேதி காலை மாணவர்களுக்கும், 24-ந் தேதி காலை மாணவிகளுக்கும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. பளு தூக்கும் போட்டிகள் 23-ந் தேதி காலை மாணவர்களுக்கும், 24-ந் தேதி காலை மாணவிகளுக்கும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெறும்.

    கடற்கரை கையுந்து பந்து போட்டிகள் 13-ந் தேதி ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் நடைபெறும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள வரும்போது, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், Bonafied சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×