என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
Byமாலை மலர்22 Jun 2022 3:21 PM IST
- சிங்கம்புணரி அருகே வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான அதிகாரிகள், பரம்பரை ஸ்தானிகம் ரவி குருக்கள் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் வடுக பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
முன்னதாக ம்ருத்ஜெய ஹோமம், நவகிரக ஹோமம், சத்ருசம்ஹார ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாகுதியுடன் பூஜைகள், யாக பூஜைகள் நிறைவு பெற்றன.
அதன்பின் பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீப ஆரத்தியுடன் பூஜைகள் நிறைவு பெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான அதிகாரிகள், பரம்பரை ஸ்தானிகம் ரவி குருக்கள் செய்திருந்தனர்.
Next Story
×