search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் புரவி எடுப்பு விழா
    X

    கோவில் புரவி எடுப்பு விழா

    • திருப்பத்தூர் அருகே கருவேம்பு செல்ல அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30, காளைகள் 10 என சுமார் 80 புரவிகள் வடிவ மைக்கப்பட்டிருந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடக்கு இளையாத்தங் குடியில் பூரண புஷ்கலா சமேத கருவேம்பு செல்ல அய்யனார் கோவில் உள்ளது. இங்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கடந்த ஜூன் 20-ந் தேதி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சேங்கையிலிருந்து பிடி மண் கொடுத்தல் நடந்தது. தொடர்ந்து அரண்மணை குதிரை, நாட்டுக்குதிரை தலா ஒன்று, கிராமத்து குதிரை 32, நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30, காளைகள் 10 என சுமார் 80 புரவிகள் வடிவ மைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிராமத்தார்களும், தங்கள் கிராமசாமியாடிகளுடன் சூளைக்கு வந்து புரவி களுக்கு மரியாதை செய்தனர். பின்பு சாமியாட்டம் நடந்தது. புரவி களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் தங்களுக்கு பாத்தியப்பட்ட புரவிகளை தோளில் சுமந்தபடி எட்டரை கிராம மக்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புரவிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்த புரவி எடுப்பு விழாவில் வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, கோயில் இளையாத்தங்குடி, சந்திரன் பட்டி, சேவிணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, ரகு நாதப்பட்டி, கீரணிப்பட்டி, முத்தூர்,விராமதி, கல்லாப்பேட்டை, அச்சரம் பட்டி, காவேரிபுரம் உள்ளி ட்ட எட்டரை கிராமத்தினர் பங்கேற்றனர். போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×