என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தாயமங்கலம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தொடக்கம் தாயமங்கலம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/09/1846914-mnmtemple.webp)
தாயமங்கலம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தாயமங்கலம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
- குளம் சீரமைப்புப் பணிகளை அறங்காவலர் வெங்கடேசன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாயமங்கலம் கிராமத்தில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் விழா பத்து நாட்கள் நடைபெறும். பங்குனி விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீச்சட்டி, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு திருவிழா வரும் மார்ச் 29-ந் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி இக்கோவிலில்தற்போது கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் வடக்கு பகுதியில் உள்ள தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக தற்போது தீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிவடைந்த பின்பு அருகே உள்ள வயல்களில் உள்ள மின்மோட்டார் மூலம் தீர்த்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.
கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் மற்றும் குளம் சீரமைப்புப் பணிகளை அறங்காவலர் வெங்கடேசன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.