search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
    X

    கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் தொழில் நுட்பத்தை சிக்ரி இயக்குநர்

    கலைச்செல்வி சுமிட்ஸ் நிறுவன இயக்குநர் ராஜ்மோகன் சத்தியதேவிடம் வழங்கினார்.

    புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

    • கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளனர்.
    • கோவையை சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி சிக்ரி வளாகத்தில் நடந்தது.

    காரைக்குடி

    காரைக்குடியில் செயல்படும் மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் (சிக்ரி) 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 19 கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

    முதற்கட்டமாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடை அதே வெப்பநிலையில் கடத்தி, அதை திரவ நிலைக்கு மாற்றுவதற்கான ஆராய்ச்சியில் சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் விஞ்ஞானிகள் ரவிபாபு, ஷ்ரவந்தி, வாசுதேவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். தற்போது அதற்கான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த தொழில் நுட்பம் கோவையை சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி சிக்ரி வளாகத்தில் நடந்தது. சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி இந்த தொழில் நுட்பத்தை சுமிட்ஸ் நிறுவன இயக்குநர் ராஜ்மோகன் சத்தியதேவிடம் வழங்கினார். இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி கூறிய தாவது:-தற்போது தொழி ற்சாலைகளில் வெளியாகும் கார்பன்டை ஆக்சைடானது குளிர்விக்கப்பட்டு, மீண்டும் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தில் திரவ நிலைக்கு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவினங்கள் அதிகம் உள்ளது. அந்த செலவினத்தை 30 முதல் 40 சதவீதம் குறைக்கும் வகையில் எங்கள் விஞ்ஞானிகளின் தொழில் நுட்பம் அமைந்துள்ளது.

    இதன்படி தொழிற்சாலைகளில் 70 டிகிரி வெப்பத்தில் வெளிவரும் கார்பன்டை ஆக்சைடை அதே வெப்பநிலையில் பயனுள்ள திரவ கார்பன்டை ஆக்சைடாக மாற்றி உருளைகளில் சேமித்து ஆற்றலாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் உலக வெப்ப மயமாதல் குறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்தியாவில் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடால் 40 சதவீதம் அளவிற்கு வெப்பம் ஏற்படுகிறது. அதனால், முதற்கட்டமாக இந்த தொழில் நுட்பத்தை கோவை சுமிட்ஸ் நிறுவனம் அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வின்போது மூத்த விஞ்ஞானி சத்யநாராயணன் உள்பட விஞ்ஞானிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×