search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு
    X

    கீழடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அருகில் அமைச்சர்கள் பெரியகருப்பன், தங்கம்தென்னரசு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பழனிவேல்தியாகராஜன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., தமிழரசி எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு

    • கீழடிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கீழடியில் உலகதரம் வாய்ந்த சுமார் ரூ.18.43 கோடி செலவில் அமைக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா நடந்தது.

    இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தனது செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டார்.

    முன்னதாக கீழடி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் நிகழ்ச்சியில் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    கீழடி கிராமத்துக்கு செல்லும் வழியில் கிராமிய பாடல்கள் பாடியும், கரகம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர்- திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ.- நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜிமுதீன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நகராட்சி, யூனியன் துணைத் தலைவர்கள் பாலசுந்தரம், முத்துசாமி, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. தொண்டர்கள், கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×