என் மலர்
உள்ளூர் செய்திகள்
காய்கறி, உணவுக்கழிவு மூலம் பயோ கியாஸ் தயாரிப்பு
- காய்கறி, உணவுக்கழிவு மூலம் பயோ கியாஸ் தயாரிக்கப்பட்டது.
- இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்று கூறினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் காய்கறி, உணவுக்கழிவு மூலம் எரிவாயு தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு விரைவில் தொடங்கபட இருக்கிறது.
மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி யில்300-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு விறகு அடுப்பில் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் உண்டாகும் புகையால் சமையலர்கள் பாதிக்கப்படு கின்றனர்.
இதனை போக்க ஊராட்சி சார்பில் தூய்மை பாரதம் திட்டத்தில் பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் காய்கறி, உணவுக்கழிவு களில் இருந்து தயாரிக்கும் பயோ கேஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் சத்துணவு சமைக்கப் பட உள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக் கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும். இதை பயன்படுத்தி பள்ளிகளில் சத்துணவு சமைக்கலாம்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் அன்பழகன் கூறுகையில், சத்துணவு சமைக்கும் போது கிடைக்கும் காய்கறி கழிவுகள், மாணவர்கள் சாப்பிட்ட பின்னர் கிடைக் கும் உணவுக்கழிவுகள், இதுதவிர சந்தைகளில், குப்பைகள் சேகரிக்கும் போது கிடைக்கும் காய்கறி, உணவு கழிவுகள் போன்றவை பயன்ப டுத்தி எரிவாயு தயாரிக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்று கூறினார்.