search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில் வருடாபிஷேக விழா
    X

    வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில் வருடாபிஷேக விழா

    • வேம்பத்தூர் கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
    • இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் அமைந்துள்ள ஆவுடை நாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.

    இந்த கோவிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    இந்த கோவிலில் மட்டும் நவகிரகங்களில்உள்ள புதன் பகவான் சிம்ம வாகனத்தில் காட்சிகொடுப்பதால் தென்மாவட்டங்களில் உள்ள புதன் தலமாக கருதப்படுகிறது. மாசி மகம் தினத்தில் வருடாபிஷேக விழா நடந்தது.

    கோவில் முன் மண்டபத்தில் புனித நீர்க் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. கைலாசநாதர் சுவாமிக்கும், ஆவுடை நாயகி அம்மனுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதன் பின்னர் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    பின்னர் கோவிலில் நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.

    Next Story
    ×