search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகையாறு சுத்தப்படுத்தும் பணிகள்-அமைச்சர் பார்வையிட்டார்
    X

    வைகை ஆற்றங்கரையில் அமைச்சர் பெரியகருப்பன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அருகில் கலெக்டர் ஆஷா அஜீத், நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளனர்.

    வைகையாறு சுத்தப்படுத்தும் பணிகள்-அமைச்சர் பார்வையிட்டார்

    • மானாமதுரையில் வைகையாறு சுத்தப்படுத்தும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
    • நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் வைகையாற்றை சுத்தப்படுத்தும் பணி நீர்நிலை பாதுகாப்புக்குழு சார்பில் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், இந்தோ திபெத் எல்லைப் படை வீரர்கள், நீர்நிலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகையாற்றுக்குள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அங்கு வளர்ந்திருந்த அமலைச்செடிகளை அகற்றினர். மேலும் குப்பைகளையும் அப்புறப் படுத்தினர். அமைச்சர் பெரியகருப்பன் நேரில் வந்து இந்த பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஆற்றங்கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், சிவகங்கை மாவட்டத் தில் வைகையாறு சுத்தப் படுத்தும் பணி ஏற்கனவே திருப்புவனத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதே போன்று மாவட்டம் முழு வதுமுள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் இந்த பணியில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தை அணுகி தங்கள் பங்க ளிப்பை வழங்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ரங்க நாயகி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணா துரை, நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×