என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் 343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/27/1872745-svgpro2.webp)
திருவேகம்பத்தூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்.
343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேவகோட்டை அருகே 343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
- கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 343 பயனாளிகளுக்கு ரூ.41.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படை யில் திருவேகம்பத்தூர் கிராமத்தில் நடந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 287 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அதில், தகுதியுடைய 218 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்க ளுக்கு நலத்திட்ட உதவி களும், அதன் பயன்களும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அவர் பேசினார்.இந்த முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.