என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/07/1818387-svgpro.webp)
சிவகங்கை யூனியன் முத்துபட்டி ஊராட்சியில் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் கடலைமிட்டாய் தயார் செய்யும் பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.3.32 கோடியில் பணிகள் நடந்து வருவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
- உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய ரூர்பன் திட்டம் வாணியங்குடி தொகுப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் வாணியங்குடி, சோழபுரம், சக்கந்தி, காஞ்சிரங்கால், அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடி, கீழ்பாத்தி மற்றும் இடையமேலூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தலா ரூ.47.42 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பஞ்சா யத்திலும் சூரிய உலர்த்தி, கடலைமிட்டாய், பால்கோவா உற்பத்தி, கால்நடை தீவனம் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு ஆகிய 6 எந்திரங்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி பணி நடைபெற உள்ளது.
உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் தோட்டக்கலைத்துறை மூலம் எந்திரங்கள் நிறுவும் பணி மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து கிராமத்தில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேர் பரப்ப ளவில் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை ரூர்பன் நர்சரி செயல்பாடுகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் வானதி, தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.