search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிக்கையினை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்ததற்காக அமைச்சர், வக்பு வாரிய செயலாளரை நேரில் சந்தித்து  நன்றி தெரிவித்த சிவபத்மநாதன்
    X

    வக்பு வாரிய செயலாளர் ரபிபுல்லாவை சிவபத்மநாதன் நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

    கோரிக்கையினை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்ததற்காக அமைச்சர், வக்பு வாரிய செயலாளரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சிவபத்மநாதன்

    • பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • 6 பள்ளிவாசலுக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான பட்டியல் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    சென்னையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் வக்பு வாரிய செயலாளர் ரபி புல்லாவை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராணம் முகைதீன் ஆண்டவர்பள்ளிவாசல் சுற்றுச்சுவரை சீரமைக்க வீராணம் ஒன்றிய கவுன்சிலர் சேக் முகமது கொடுத்த கோரிக்கையின் அடிப்படை யிலும், மத்தளம்பாறை முகைதீன் ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ ஆம்பூர் பாதுஷா பள்ளிவாசலுக்கும், பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கைகள் அடிப்படையிலும், முதலியார்பட்டி முகமது நைனார் ஜூம்மா பள்ளிவாசலுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுன்சிலர் முகமது கனி கோரிக்கையின் அடிப்படையில் 11-வது வார்டு நைனா முகமது ஜூம்மா பள்ளிவாசலுக்கும், கடையநல்லூர் கிழக்கு பகுதி அல் மூப்பன் கீழத்தெரு நைனா முகம்மது ஜூம்மா பள்ளிவாசலுக்கு கவுன்சிலரும், முன்னாள் நகர செயலாளரும், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளருமான முகமது அலி கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சுற்றுச்சுவர் கட்டவும் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்று கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஏற்கனவே சிவபத்மநாபன் கொடுத்த மனுவின் அடிப்படையில் மனுவில் கூறப்பட்டுள்ள 6 பள்ளிவாசலுக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான பட்டியலை சிவபத்மநாதனிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோரிக்கையினை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் மற்றும் வக்புவாரிய செயலாளருக்கு சிவபத்மநாதன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    Next Story
    ×