search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாட்கோ சார்பில் ஆதி திராவிட -பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: விழுப்புரம் கலெக்டர் தகவல்
    X

    தாட்கோ சார்பில் ஆதி திராவிட -பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: விழுப்புரம் கலெக்டர் தகவல்

    • ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்பட உள்ளது.
    • ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.18,500 வரை பெற வழி வகை செய்யப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் பெண்களுக்கும் மற்றும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமை யாக முடிக்கப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க நடவ டிக்கை மேற்கொ ள்ளப்படும். இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.18,500 வரை பெற வழி வகை செய்யப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பி க்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சிகட்டணத்தை தாட்கோ வழங்கும். இத் தகவலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×