என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கச்சிராயப்பாளையத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த பாம்பு :மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் கச்சிராயப்பாளையத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த பாம்பு :மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/30/1857707-snake.webp)
கச்சிராயப்பாளையத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த பாம்பு :மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
- பாம்பைப்பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப் பாளையம் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது மேலும் இந்த பஸ் நிலையத்தில் வாரம் தோறும் புதன்கிழமை வாரசந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை என்பதால் கச்சிராய பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள் காய்கறி வாங்குவதற்காக அதிக அளவில் வார சந்தையில் கூடியிருந்தனர். வாரச் சந்தை நடக்கும் இடம் அருகே டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது
.இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் மதுபானம் வாங்குவதற்காக மதிப்பிரியர்கள் கடை முன்பு வரிசையில் நின்று கொண்டி ருந்தனர். அபோது மதுபான கடைக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளிய வந்தது. இதை பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மதுப் பிரியர்கள் ஓடுவதை பார்த்து விட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.