என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வால்பாறை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சம்
- பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
- தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் திருமணம் செய்து கொண்ட நாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கோவை:
திண்டுக்கல் ஜி.எஸ். நகரை சேர்ந்தவர் கனகவேல். இவர் திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஜெயசூர்யா (வயது 22). ஈச்சனாரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் டி. பாறைப்பட்டியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் உதயசூரியன் (23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் ஜெயசூர்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. உதயசூரியன் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10-ந் தேதி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தனர்.
இதனை தொடர்ந்து 2 பேரும் பெற்றோருக்கு பயந்து வால்பாறைக்கு வந்தனர். சோலையாறு அணையில் ஒரு காட்டேஜில் அறை எடுத்து தங்கினர்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு வால்பாறை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் திருமணம் செய்து கொண்ட நாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வால்பாறை போலீசார் 2 பேரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து அவர்களை நேரில் வரவழைத்துள்ளனர். இருதரப்பினரும் வந்தபின்னர் பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.