search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பம் அருகே மத்திய அரசு சார்பில் மண், பாறைகள் ஆய்வு
    X

    கனிமவளம் குறித்து ஆய்வு நடந்த காட்சி.


    கம்பம் அருகே மத்திய அரசு சார்பில் மண், பாறைகள் ஆய்வு

    • பெருங்கனிமங்களான நிலக்கரி, சுண்ணாம்புக்கல், தங்கம், பிளாட்டினம், சாதாரண கற்கள், மண், கிராவல் மண் உள்பட கனிம வளங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
    • நிலக்கரி, உலோகம் ஆகியவற்றை கண்டு பிடிக்க டிரில்லிங் முறை பயன்படுத்தப்படுகிறது.

    கம்பம்:

    கம்பம் அருகே கம்பம் மெட்டு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பு சார்பாக நிலக்கரி, எக்கு, உலோகம், கனிமம் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்தனர். இந்த அமைப்பு பல்வேறு பகுதிகளில் உள்ள கனிம வளங்களை ஆய்வு செய்து அரசுக்கு வழங்கி வருகிறது. மேலும் புவியியல் சிறப்பு வரைபடங்கள் மற்றும் மண்டல வரைபடங்கள் தயாரிப்பது நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து தெரிவித்து வருகிறது.

    டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட ஆய்வு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. பெருங்கனிமங்களான நிலக்கரி, சுண்ணாம்புக்கல், தங்கம், பிளாட்டினம், சாதாரண கற்கள், மண், கிராவல் மண் உள்பட கனிம வளங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கின்ற னர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான கம்பம் மெட்டு பகுதியில் அதிர்வு இல்லாத ஆழ்துளை எந்திரங்கள் மூலம் மண், கற்கள், பாறை ஆகியவை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணி 3 நாட்களாக நடைபெறுகிறது. 20 முதல் 200 அடி வரை தோண்டப்பட்டு (கோர்) மாதிரி சேகரிக்கப்படுகிறது. பின்னர் இந்த மாதிரிகள் தனிப்பெட்டிகளில் அடை க்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த பணிகளில் கொல்கத்தா, கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள கனிம வளங்களை ஆய்வு செய்து வருகிறோம். நிலக்கரி, உலோகம் ஆகியவற்றை கண்டு பிடிக்க டிரில்லிங் முறை பயன்படு த்தப்படுகிறது. கோர் மாதிரி எடுத்து அனுப்புவது எங்கள் குழுவின் பணியாகும்.

    தமிழகத்தில் ஏற்கனவே சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதே போல் கோர் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு ள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் இந்த பணி நடைபெற்று வருகிறது. இதன் மாதிரிகளை ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட பணி நடைபெறும் என்றனர்.

    Next Story
    ×