என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பூதலூரில் 6 நிமிடம் தாமதமாக வந்த 15 பேருக்கு குரூப்-4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு
- தஞ்சை மாவட்டம் பூதலூரில் உள்ள ஒரு மையத்துக்கு 6 பெண்கள் உள்பட 15 பேர் 6 நிமிடம் தாமதமாக வந்தனர்.
- இதனால் அவர்களை கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை.
பூதலூர்:
தமிழகத்தில் இன்று காலை டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது. தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பூதலூரில் உள்ள ஒரு மையத்துக்கு 6 பெண்கள் உள்பட 15 பேர் 6 நிமிடம் தாமதமாக வந்தனர். இதனால் அவர்களை கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை.
தொலை தூரத்தில் இருந்து வந்ததால் சிறிது நேரம் தாமதமாகி விட்டது என அவர்கள் முறையிட்டு பார்த்தும் பயன் இல்லை. இதனால் அவர்கள் தேர்வு மையத்தின் வெளியே ஏமாற்றத்துடன் காத்திருந்தனர். தகவல் அறிந்த அவர்களின் பெற்றோரும் விரைந்து வந்து மைய கண்காணிப்பாளரிடம் பேசி பார்த்தனர். ஆனால் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கூறினர்.
இதனால் தேர்வகள் மற்றும் அவர்களது பெற்றோர் மையத்தின் வெளியே காத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.