search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 18 புகார்கள் பதிவு
    X

    தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 18 புகார்கள் பதிவு

    • செல்போன் செயலியின் மூலம் 5 புகார்களும் வந்துள்ளது.
    • மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நன்னடத்தை விதிகள் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதைதொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 18004259188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 299188, 299492, 299433, 299255 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை சி விஜில் என்ற செல்போன் செயலியில் புகைப்படமாகவும், வீடியோ, ஆடியோவாகவும் பதிவேற்றம் செய்து தெரிவிக்கலாம். இந்த செயலியில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கற்பகம் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று வரை தொலைபேசி வாயிலாக 13 புகார்களும், சி விஜில் என்ற செல்போன் செயலியின் மூலம் 5 புகார்களும் வந்துள்ளது. இந்த புகார்கள் அனைத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×