என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாகன சோதனையில் சொகுசு காரில் கடத்திய 20 மூட்டை குட்கா சிக்கியது- 2 டிரைவர்கள் கைது
- காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் கருப்பூர் சுங்கசாவடி அருகே இன்று அதிகாலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், போலீசார் பாலகிருஷ்ணன், கோவிந்தன், ஏட்டு காவேரி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4.30 மணிக்கு ஓசூரில் இருந்து செவ்வாய்பேட்டைக்கு சொகுசு கார் வந்தது.
இந்த காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன் உதவி கமிஷனர் மற்றும் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் பிடிப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை பார்வையிட்டனர். இவற்றை காரில் கடத்தி கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலம் பாடுமேர் பகுதியை சேர்ந்த டிரைவர் கல்யாண் சிங் (24) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தான், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள கடை உரிமையாளர் தேவா என்பவருக்கு இந்த ஹான்ஸ் மற்றும் குட்கா கொண்டு செல்வதாகவும், அவருடைய முகவரி ஏதும் தனக்கு தெரியாது எனவும், வெளியூரில் இருந்து இவற்றை கடத்தி கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கல்யாண் சிங் மற்றும் அந்த காரில் மாற்று டிரைவராக பணிபுரிந்த செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா(41) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சொகுசு காரில் 20 மூட்டை குட்கா கடத்தி கொண்டு வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.