என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் 2 குழந்தை உள்பட 3 பேர் எரித்துக்கொலை-  3 பேர் கவலைக்கிடம்
    X

    கடலூரில் 2 குழந்தை உள்பட 3 பேர் எரித்துக்கொலை- 3 பேர் கவலைக்கிடம்

    • குடும்ப பிரச்சனை காரணமாக சத்குருவிற்கும் தனலட்சுமிக்கும் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
    • பிரச்சனை காரணமாக சத்குரு நேரடியாக பிரகாஷின் வீட்டிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கடலூர்:

    கடலூர் செல்லங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவரது மனைவி தமிழரசி (31). இவர்களுக்கு ஹாசினி என்ற 4 மாத குழந்தை உள்ளது. தமிழரசியின் தங்கை தனலட்சுமி, இவரது கணவர் சற்குரு. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இதில் சற்குரு, தனலட்சுமி ஆகியோர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சற்குருவிற்கும், தனலட்சுமிக்கும் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனலட்சுமி அவரது அக்கா தமிழரசி வீட்டிற்கு வந்தார்.

    இதன் பின்னர் இன்று காலை பிரகாஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த தனலட்சுமியிடம் சற்குரு போனில் பேசினார். பின்னர் சற்குருவுக்கும், தனலட்சுமிக்கும் இடையே உள்ள பிரச்சினை காரணமாக சற்குரு நேரடியாக பிரகாஷின் வீட்டிற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் சிறிது நேரத்தில் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

    உடனே சற்குரு தான் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து வீட்டில் இருந்தவர்கள் மீது வீட்டை பூட்டி கொண்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் தீயினால் புகை மண்டலமாக காணப்பட்டது.

    இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த முதுநகர் போலீசார் ஆபத்தான நிலையில் அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த தீ விபத்தில் தமிழரசி அவரது குழந்தை ஹாசினி, மற்றும் 6 மாத ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்த சற்குரு அவரது மனைவி தனலட்சுமி, தனலட்சுமியின் தாய் செல்வி ஆகியோரை ஆபத்தான நிலையில் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×