என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவுந்தபாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்- 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது
- கோவில் திருவிழாவுக்கு சென்று வீட்டு சிறுமியின் தாய் வீடு திரும்பி உள்ளார்.
- சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அழுதவாறு கூறியுள்ளார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கவுந்தப்பாடி அருகே ஈஞ்சரம்மேடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சம்பவத்தன்று இந்த கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அந்த 35 வயது பெண் தனது மகனை அழைத்து கொண்டு சென்றார். வீட்டில் 7 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மோகன், சிவக்குமார், வாசுதேவன் மற்றும் அந்த சிறுமியின் உறவினர் குணசேகரன் ஆகியோர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் சிறுமியிடம் நடந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று கூறி சிறுமியை மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
கோவில் திருவிழாவுக்கு சென்று வீட்டு சிறுமியின் தாய் வீடு திரும்பி உள்ளார். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அழுதவாறு கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மோகன், சிவக்குமார் வாசுதேவன் மற்றும் குணசேகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






