என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
யானையை 50 அடி உயரத்தில் இருந்து ஆபத்தான முறையில் படிக்கட்டு வழியாக இறக்கும் பாகன்
- புனித நீர் வெள்ளிக்குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
- இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அன்று முதல் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது.
புனித நீர் வெள்ளிக்குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதேபோல இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட யானை, இரவு நேரத்தில் கன்னியாகுமரி பார்க்வியூ பஜாரில் உள்ள கடைவீதி வழியாக கோவிலுக்கு அழைத்து வரப்படும் போது 50 அடி உயரத்தில் இருந்து குறுகிய படிக்கட்டு வழியாக பாகனால் இறக்கப்படும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.
இந்த திகில் காட்சி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.