என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
- சந்தேகத்திற்கிடமாக அங்கு வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
- வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாள முத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் 'கியூ'பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர், இருதயராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதனைத் தொடர்ந்து வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ பீடி இலை பண்டல்கள் மற்றும் உயிர் கொல்லி பூச்சி மருந்துகள், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 425 கிலோ கட்டிங் செய்த பீடி இலை 17பண்டல்கள் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8,750 பாக்கெட்டுகளில் அடைத்து 15 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த மருந்து பொருட்கள் ஆகியவை இருந்தது அவற்றை இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரிய வந்தது.
அவற்றை கைப்பற்றிய போலீசார் அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.