என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில் காவலாளியை தள்ளி விட்டு கூர்நோக்கு இல்ல மாடியில் இருந்து குதித்த சிறுவன்
- சிறுவன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
- சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த கோண்டூரில் அரசு கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகின்றது. இன்று காலை கூர்நோக்கு இல்லத்திலிருந்து சங்கராபுரம் பகுதியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வைத்திருந்த 17 வயது சிறுவன் தலை மற்றும் காலில் அடிபட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கடந்த 7 ந் தேதி அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வந்த நிலையில், இன்று காலை கூர்நோக்கு இல்லத்தில் 2-வது தளத்தில் துணி காயவைப்பதற்கு சென்று உள்ளார். இவருக்கு பாதுகாப்பாக காவலாளி துரைராஜ் என்பவரும் உடன் இருந்தார்.
அப்போது திடீரென்று 17 வயது சிறுவன் காவலாளியை தள்ளிவிட்டு 2-வது மாடியில் இருந்து தப்பித்து செல்வதற்காக குதித்துள்ளார். அப்போது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் சிறுவன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.