என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை 300 ரூபாயாக உயர்வு
- முட்டையின் உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
- ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக முட்டை விலை 515 காசுகளாக நீடித்தது.
இந்த நிலையில் முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டையின் உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:- சென்னை-580, பர்வாலா-458, பெங்களூர்-570, டெல்லி-472, ஹைதராபாத்-505, மும்பை-565, மைசூர்-575, விஜயவாடா-480, ஹொஸ்பேட்-530, கொல்கத்தா-552.
நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வழங்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
பல்லடத்தில் நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கறிக்கோழி உயிருடன் ரூ.139 ஆக இருந்த நிலையில் 2 ரூபாய் உயர்த்தி, ஒரு கிலோ ரூ.146 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. இதனால் உரித்தகோழி ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை சேலம், நாமக்கல் மாவட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கடும் வெயிலால் கோழியின் எடை குறைந்ததால் கறிக்கோழி விலை உயர்ந்ததாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முட்டைக்கோழி நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ. 95 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்