என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் அரசு பள்ளியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு
- மாணவர் சேர்க்கை அதிகரித்திட பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு, தினசரி சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்திட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் காலனி அருகில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக பள்ளியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு முதல் பருவ புத்தகங்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி, மாணவர்களுக்கான உதவித்தொகை, இலவச உபகரணங்கள், பாட புத்தகங்கள் அனைத்தும் வழங்கி பாதுகாப்பாக மாணவர்கள் இருந்து வரும் சூழ்நிலையில், இதனை பொதுமக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு செய்து அரசு பள்ளிகளில்
மாணவர் சேர்க்கை அதிகரித்திட பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், அரசு சார்பில் மாணவர் களுக்கு வழங்கப்படும் இலவச உபகரணங்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு, தினசரி சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்திட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.