search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தர்மத்தின் பக்கம் தீர்ப்பு வந்துள்ளது- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
    X

    தர்மத்தின் பக்கம் தீர்ப்பு வந்துள்ளது- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

    • கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க சந்தித்து ஒருலட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றது.
    • பிரதமர் இந்திராகாந்தி, அப்போதயை முதல்-அமைச்சர் கருணாநிதி, காமராஜர் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டும் எங்கள் வெற்றியை தடுக்க முடியவில்லை.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது,

    இந்த தீர்ப்பு தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். கடவுள் எங்கள் பக்கம் உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா எங்களை வழிநடத்திச்செல்கிறது. தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது. இனி அ.தி.மு.கவுக்கு தொடர் வெற்றிகள்தான் கிடைக்கும். ஓ.பன்னீர்செல்வம் பொய்யாக ஒரு அணியை உருவாக்கி பொம்மை போல் செயல்பட்டு வந்தார். இன்று காலை 10.30 மணியுடன் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அவருடன் கடைசியாக இருந்த 106 பேர்களும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி எந்த வழக்கும் தொடர முடியாது. ஈரோடு இடைத்தேர்தலிலும் எங்களுக்கு அமோக வெற்றிகிடைக்கும். குறைந்தபட்சம் 50ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தென்னரசு வெற்றிபெறுவார்.

    1972-ம்ஆண்டு கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நான் இந்த இயக்கத்தில் உள்ளேன். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க சந்தித்து ஒருலட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றது. பிரதமர் இந்திராகாந்தி, அப்போதயை முதல்-அமைச்சர் கருணாநிதி, காமராஜர் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டும் எங்கள் வெற்றியை தடுக்க முடியவில்லை. அதேபோன்ற வெற்றி ஈரோடு இடைத்தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.

    Next Story
    ×