search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி முருகன் கோவிலில் இயக்குனர் பாக்யராஜ் தனது மனைவியுடன் சாமி தரிசனம்
    X

    இயக்குனர் பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் பழனி கோவிலுக்கு வந்தார்.

    பழனி முருகன் கோவிலில் இயக்குனர் பாக்யராஜ் தனது மனைவியுடன் சாமி தரிசனம்

    • நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் இன்று பழனி கோவிலுக்கு வந்தார்.
    • அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகைகள் சமந்தா, அமலாபால், நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சிமாமோகன், காமெடி நடிகர் சந்தானம் உள்பட ஏராளமானோர் தொடர்ந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    அதன் வரிசையில் இன்று நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் பழனி கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர்கள் பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தும் அவர்கள் வழிபட்டனர். பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    அதன்பின் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்த பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் காரில் புறப்பட்டு சென்றனர்.

    Next Story
    ×