என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/01/1874485-egg.webp)
X
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு
By
Suresh K Jangir18 May 2023 9:43 AM IST
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- முட்டை விற்பனை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது.
- முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவதற்கான முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் முட்டை விற்பனை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவதற்கான முடிவு செய்யப்பட்டது. அதன்படி 465 காசுகளாக இருந்த முட்டை விலை 470 காசுகளாக உயர்ந்தது.
கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் பிடி தடைக்காலம் இருப்பதால் முட்டை விற்பனை அதிகரித்து உள்ள நிலையில் தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
X