search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- பழனி மலைக்கோவிலில் பக்தர்களுக்காக தற்காலிக நிழற்பந்தல்
    X

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- பழனி மலைக்கோவிலில் பக்தர்களுக்காக தற்காலிக நிழற்பந்தல்

    • கோடைகாலம் தொடங்கும் முன்னரே தற்போது பழனியில் வெயில் வாட்டி வதைக்கிறது.
    • பழனி மலைக்கோவிலில் தரிசனத்திற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி திருவிழா காலங்களிலும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகின்றனர். கோடைகாலம் தொடங்கும் முன்னரே தற்போது பழனியில் வெயில் வாட்டி வதைக்கிறது.

    இதனால் பழனி மலைக்கோவிலில் தரிசனத்திற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. வெளிப்பிரகாரத்தை சுற்றிவரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். எனவே பக்தர்களை வெயிலில் இருந்து காக்கவும், நிழலில் இளைப்பாற வசதியாகவும் மலைக்கோவில் அலுவலகத்தை ஒட்டியுள்ள பகுதியில் தகரத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தரிசனம் முடிந்து வெளிப்பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் பாதத்தில் சூடு ஏற்படுவதை தவிர்க்கவும், தேங்காய் நாரினால் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது இந்த தரைவிரிப்பில் கோவில் பணியாளர்கள் தண்ணீர் தெளிப்பதால் பிரகாரத்தை சிரமமின்றி பக்தர்கள் சுற்றி வருகின்றனர்.

    இருப்பினும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் தெளித்த சிறிதுநேரத்திலேயே ஆவியாகி விடுகிறது. இதனால் வெளிப்பிரகாரத்தை சுற்றிலும் கூலிங்பெயிண்ட் அடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வெயில் தெரியாமல் இருக்க வடக்கு கிரிவீதியில் 500 மீ நீளத்திற்கு தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×