search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் கிடந்த நகை, பணத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்- இன்ஸ்பெக்டர் பாராட்டு
    X

    சாலையில் கிடந்த நகை, பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்தபோது எடுத்த படம்.

    சாலையில் கிடந்த நகை, பணத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்- இன்ஸ்பெக்டர் பாராட்டு

    • பள்ளபட்டி பாலம் அருகே காரின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த சூட்கேஸ் தவறி ரோட்டில் விழுந்தது.
    • மதுரையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி வந்த அலங்காநல்லூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் நடுரோட்டில் சூட்கேஸ் கிடப்பதை கண்டு அதை எடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் செந்தில். இவர் அழகர் கோவில் அருகே உள்ள கிடாரிபட்டிக்கு சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ வழிபாடு நடத்த சென்றார். பின்னர் மீண்டும் நத்தம் வழியே பழனிக்கு திரும்பி கொண்டிருந்தார். பள்ளபட்டி பாலம் அருகே காரின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த சூட்கேஸ் தவறி ரோட்டில் விழுந்தது. அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி வந்த அலங்காநல்லூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் நடுரோட்டில் சூட்கேஸ் கிடப்பதை கண்டு அதை எடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.

    அந்த சூட்கேசில் ரூ.25 ஆயிரம் பணமும், 3 பவுன் தங்கநகை மற்றும் செல்போன் ஆகியவை இருந்தது. இதையடுத்து நத்தம் போலீசார் உரியவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார். பின்னர் ரமேஷ் கையாலேயே அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட செந்தில் குடும்பத்தினர் ரமேசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். லாரி டிரைவர் ரமேசின் நேர்மையை பாராட்டி நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி சன்மானம் வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×