என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரச்சலூர் அருகே லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு- டிரைவர் அதிர்ஷ்டமாக உயிர் தப்பினார்
- நடுரோட்டில் லாரி தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள சில்லாங்கட்டு புதூர் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான லாரி சென்று கொண்டிருந்தது.
லாரி பழுது காரணமாக ஈரோட்டில் உள்ள பட்டறையில் பழுது நீக்கி விட்டு ஓட்டுநர் வேலுச்சாமி (42 ) என்பவர் லாரியை ஈரோட்டில் இருந்து அரச்சலூர் அருகே உள்ள வடபழனி செட்டிக்கு கொண்டு சென்ற போது, சில்லாங்கட்டபுதூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென லாரியிலிருந்து புகை வெளியேறியது. இதனால் ஓட்டுநர் வேலுச்சாமி லாரியை அப்படியே நிறுத்தி இறங்கிப் பார்த்தார். சற்று நேரத்தில் தீ மளமளவென பிடித்து லாரி முழுவதும் எரிய தொடங்கியது. நடுரோட்டில் லாரி தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து சென்னிமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் லாரி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. நல்ல வாய்ப்பாக டிரைவர் லாரிய விட்டு இறங்கியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.