என் மலர்
உள்ளூர் செய்திகள்
தாம்பரம் அருகே மின்கம்பியில் உரசி கண்டெய்னர் லாரி தீப்பிடித்தது- டிரைவர் உயிர் தப்பினர்
- நாகல்கேணி அருகே வந்த போது கண்டெய்னர் லாரி மீது தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி உரசியது. இதில் மின்கம்பி அறுந்து லாரியின் மீது விழுந்து தீப்பற்றியது.
- கண்டெய்னர் லாரியில் இருந்த மூலப்பொருட்கள் மளமளவென பற்றி எரிய தொடங்கியது.
தாம்பரம்:
ஐதராபாத்தில் இருந்து, பல்லாவரம் அடுத்துள்ள நாகல்கேணியில் உள்ள தனியார் நிறுவன குடோனுக்கு இன்று அதிகாலை கார்களுக்கு பயன்படுத்தும் பெயிண்ட் தயாரிப்பதற்காக 18 டன் மூல பொருட்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி வந்தது.
லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இர்பான்(35) என்பவர் ஓட்டிவந்தார். நாகல்கேணி அருகே வந்த போது கண்டெய்னர் லாரி மீது தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி உரசியது. இதில் மின்கம்பி அறுந்து லாரியின் மீது விழுந்து தீப்பற்றியது.
இதில் கண்டெய்னர் லாரியில் இருந்த மூலப்பொருட்கள் மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் இர்பான் உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மூல பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.