என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரவாயல் அருகே குடும்பத்தகராறில் முதியவர் அடித்துக்கொலை
- தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.
- மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது65). இவரது சகோதரர்கள் முருகேசன், முனுசாமி. அண்ணன்-தம்பிகள் 3பேரும் அருகருகே குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர்.
அங்கப்பன் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது.
நேற்று காலை அங்கப்பனின் மகள் தண்ணீர் எடுக்க வீட்டை விட்டு வெளியே சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக முருகேசனின் மருமகள் வனிதாவின் மீது கைபட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை கண்ட அங்கப்பன், அவரது மனைவி கற்பகம் ஆகிய இருவரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வனிதா, அவரது கணவர் ரவிகுமார் மற்றும் வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகியோர் அங்கப்பனிடம் மோதலில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அங்கப்பன் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக அங்கப்பனின் சகோதரரான முருகேசனின் மகன் ரவிகுமார் அவரது மனைவி வனிதா, வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அங்கப்பன் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் இடையே மோட்டார் சைக்கிள் நிறுத்துவது உள்ளிட்ட சிறு சிறு பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
தற்போது தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்