என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாம்பவர்வடகரையில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி 7-ம் வகுப்பு மாணவி பலி
- விபத்தில் சிறுமி ராஜேஸ்வரி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஸ்ரீராமுக்கு தலையில் அடிபட்டு உயிருக்கு போராடினார்.
சாம்பவர் வடகரை:
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவிற்கு கோவில்பட்டியை சேர்ந்த சில குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
நேற்றும் அதேபோல் சுவாமி தரிசனம் செய்யவும், சாம்பவர் வடகரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்லவும் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு ராஜகோபால் நகரை சேர்ந்த குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது அவரது மூத்த மகளான 7-ம் வகுப்பு படிக்கும் ராஜேஸ்வரி (வயது 11) தனது உறவினரான ஸ்ரீராமுடன் சாம்பவர் வடகரை சுடலைமாடன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவில் அருகே டிராக்டர் ஒன்று தண்ணீர் டேங்குடன் வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கோவிலுக்குள் திரும்பும் போது டிராக்டர் அதன் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுமி ராஜேஸ்வரி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஸ்ரீராமுக்கு தலையில் அடிபட்டு உயிருக்கு போராடினார்.
உடனே அவர்களது உறவினர்கள் ஓடி வந்து பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, முத்துப்பாண்டி விரைந்து சென்றனர். தொடர்ந்து ஸ்ரீராமை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த சிறுமி ராஜேஸ்வரி உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.