search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நர்சிங் மாணவி கழுத்தை அறுத்து கொலை- காதலன் வெறிச்செயல்
    X

    நர்சிங் மாணவி கழுத்தை அறுத்து கொலை- காதலன் வெறிச்செயல்

    • கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தரணி காதலிக்க மறுத்ததாக தெரிகிறது.
    • கத்தி வெட்டில் பலத்த காயம் அடைந்த தரணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகன். இவரது மகள் தரணி (வயது 19). இவர் சென்னை கே.கே.ரோட்டில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது தரணி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். இவரும், மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜ் என்பவரது மகன் கணேசனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தரணி காதலிக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் கணேசன் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இன்று காலை 6 மணிக்கு ராதாபுரம் கிராமத்திற்கு அவர் வந்தார்.

    அப்போது தரணி வீட்டிற்கு வெளியே இருந்த கழிவறைக்கு சென்று விட்டு திரும்பினார். அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த கணேசன் தரணியை வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தினார். இதற்கு தரணி மறுத்ததால், கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தரணியை கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கத்தி வெட்டில் பலத்த காயம் அடைந்த தரணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தரணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட விக்கிரவாண்டி போலீசார் கொலையாளி கணேசனை கைது செய்தனர். காதலிக்க மறுத்த நர்சிங் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராதாபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×