search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்- கோவை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்- கோவை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • ரெயில் நிலைய உள்புறமும், வெளிபுறமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை:

    மத்திய அரசின் அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர்.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையத்திலும் ரெயில் பெட்டிகளுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் நேற்று முதல் பல்வேறு அமைப்பினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவையில் ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளதால் யாரும் கலவரத்தில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதால் கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ரெயில்வே இன்ஸ்பெக்டர் தலைமையில் 10க்கும் அதிகமான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் அனைவரையும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். நுழைவு வாயில் முன்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலைய உள்புறமும், வெளிபுறமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×