search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு- பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
    X

    சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு- பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

    • பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி சாலை விரிவாக்க பணியை வேறு வழித்தடத்தில் அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நில எடுப்பு தனி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து வந்தனர்.
    • சாலை விரிவாக்கத்திற்கான இறுதி விசாரணை அழைப்பாணை விடுத்த நிலையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில எடுப்பு தனி தாசில்தார் புகழேந்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதியில் புது வாயல்-பழவேற்காடு சாலை 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்ட பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலையில் பெரிய காவனம் ரெயில்வே கேட் முதல் சின்னக்காவனம் வரை சாலையின் இருபுறமும் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பழமைவாய்ந்த 5 கோயில்கள் அமைந்துள்ளது.

    சாலையின் விரிவாக்க பணிக்காக இவை அகற்றப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி சாலை விரிவாக்க பணியை வேறு வழித்தடத்தில் அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நில எடுப்பு தனி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்கான இறுதி விசாரணை அழைப்பாணை விடுத்த நிலையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில எடுப்பு தனி தாசில்தார் புகழேந்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

    இதில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம், பழமைவாய்ந்த கோவில்களை அகற்ற விடமாட்டோம் என்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×