என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா சென்னை வந்தார்
- ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.
- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வந்தார்.
சென்னை:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடை பெற உள்ளது.
இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.
பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்மு கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவது போல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்காவும் பா.ஜனதா இல்லாத பிற கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார்.
அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வந்தார்.
அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி., திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், என்.ஆர். இளங்கோ, பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர்.
வரவேற்பை பெற்றுக்கொண்ட யஷ்வந்த் சின்கா கிண்டி ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்தார்.
இன்று மாலை 5 மணிக்கு கார் மூலம் யஷ்வந்த் சின்கா அண்ணா அறிவாலயம் வருகிறார்.
அங்கு அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு கோருகிறார்.
இன்று மாலை 7 மணிக்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் யஷ்வந்த் சின்கா, கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் தங்கி விட்டு நாளை காலை ராய்ப்பூருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்